பால சாஸ்தா கோயிலில் நடை அடைப்பு
மீனாட்சிப்பேட்டை ஶ்ரீ பால சாஸ்தா கோயிலில் வைகாசி பூஜையை தொடர்ந்து நேற்று நடை அடைக்கப்பட்டது.
Update: 2024-05-19 07:44 GMT
குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ ஐயப்பன் எனும் ஶ்ரீ பால சாஸ்தா கோயிலில் வைகாசி மாதம் 5 நாட்கள் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்ற பின்னர் நேற்று நடை அடைக்கப்பட்டது. மீண்டும் ஆனி மாதம் 1 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.