இந்தியா கூட்டணி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து திமுக இளைஞரணி சார்பில் நடை பயண பேரணி....
பராசக்தி நகரில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து திமுக இளைஞரணி சார்பில் நடை பயண பேரணி நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-04-16 09:41 GMT
நடை பயண பேரணி
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு “கை சின்னத்தில் “வாக்கு கேட்டு மதுரை தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் விமல் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் பாலாஜி, பகுதி செயலாளர் ஈஸ்வரன் மாமன்ற உறுப்பினர்கள் கருப்பசாமி, போஸ்முத்தையா, ராஜரத்தினம், வாசு , உள்ளிட்ட 1 ஆயிரம் பேர் கலந்து கொண் நடைபயண வாக்காளர் சந்திப்பு நடைபெற்றது. நடை பயண வாக்காளர் சந்திப்பு பேரணியில் பராசக்தி நகர் , மீனாட்சி நகர்,வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வில்லாபுரம் மீனாட்சி நகர் மெயின் ரோடு,மாநகராட்சி காலனி ஆகிய இடங்களின் வழியாக நடை பயண வாக்காளர் சந்திப்பு பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்குக்கும் மேற்பட்ட இளைஞரணியினர் கலந்து கொண்டனர்.