கிராமங்களில் அனுமதியின்றி சுவர் விளம்பரங்கள்

கிராமங்களில் அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால், தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டு அனுமதியின்றி சுவர் விளம்பரங்கள் எழுதியுள்ளதாக புகார் எழுந்து உள்ளது

Update: 2024-04-18 06:08 GMT

கிராமங்களில் அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால், தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டு அனுமதியின்றி சுவர் விளம்பரங்கள் எழுதியுள்ளதாக புகார் எழுந்து உள்ளது


தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் 19ல் நடக்கிறது. தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான மார்ச் 16ல் இருந்தே, பல்வேறு தேர்தல் நடத்தை விதியை தேர்தல் ஆணையம் அமல்படுத்தி உள்ளது. இதில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சுவர் விளம்பரம் எழுதவும், போஸ்டர் ஒட்டவும் தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. ஊராட்சி பகுதிகளில் மட்டும், வீட்டு உரிமையாளரின் அனுமதியுடன், தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பித்து சுவர் விளம்பரம் எழுத தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, கிராமங்களில் தேர்தல் பிரசார சுவர் விளம்பரம் எழுதும்போது, அனுமதி எண் எழுத வேண்டும் என்ற தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது. இருப்பினும், காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால், தேர்தல் நடத்தை விதிகள் காற்றில் பறப்பதாக புகார் எழுந்து உள்ளது. இதனால், அரசியல் கட்சியினர் அனுமதி எண் வாங்காமல், சுவர் விளம்பரம் எழுதியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உதாரணமாக காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுகாவேரிபாக்கம் மற்றும் விநாயகபுரம் சிறுகாவேரிபாக்கம் பேருந்து நிறுத்த பயணியர் நிழற்குடை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக சுற்றுச்சுவரில் தி.மு.க.,வினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதேபோல அனுமதி எண் இல்லாமல் சிறுகாவேரிபாக்கம் மற்றும் விநாயகபுரத்தில் ஆளும்கட்சியான தி.மு.க., வினர் மட்டுமின்றி எதிர்க்கட்சியான அ.தி.மு.க., வினரும் அனுமதி எண் இல்லாமல் விதியை மீறுவதில் போட்டி போட்டுக்கொண்டு சுவர் விளம்பரம் எழுதியுள்ளனர். கீழ்கதிர்பூரில் வீட்டு சுவரில் பா.ம.க.,வினர் தேர்தல் பிரசார போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

Tags:    

Similar News