கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பழனி அருகே உள்ள குதிரையாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டதால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Update: 2023-12-08 11:32 GMT

 பழனி அருகே உள்ள குதிரையாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டதால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது குதிரையாறு அணை. இதனால் அணை தற்போது முழு கொள்ளளவை எட்டி உள்ளது. அணை நிரம்பியதை அடுத்து குதிரையாறு அணையில் இருந்து பாசன வசதிக்காக நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்பொழுது வினாடிக்கு 436 கன அடி நீர் அணைக்கு வரும் நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீரை அப்படியே வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதனை முன்னிட்டு குதிரையாறு அணையின் கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் வரும் ஆற்றின் கரைக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News