சினிமாவை, சினிமாவாக பாருங்கள் - அயோத்தி பட இயக்குனர் அறிவுரை
சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும், சீரியலை சீரியலாக பர்க்க வேண்டும், மூளைச்சாவு அடைந்தவர்கள் உடலை தானம் செய்தால் 8 பேருக்கு உடல் உறுப்புகள் கிடைக்கும், உடல் உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்வார்கள் என்று அரசு அறிவித்துள்ளது என அயோத்தி பட இயக்குனர் மந்திர மூர்த்தி தெரிவித்தார்.;
இயக்குனர் மந்திரமூர்த்தி
மயிலாடுதுறை அருகே லட்சுமிபுரத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் இளைய தலைமுறையும் இந்தியாவும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற பாலா மற்றும் அயோத்தி திரைப்பட இயக்குனர் மந்திரமூர்த்தி கலந்து கொண்டனர். இதில் இயக்குநர் மந்திரமூர்த்தி பேசுகையில் சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும், சீரியலை சீரியலாக பர்க்க வேண்டும் 50, நாள் 60, நாள் 70 நாள் என்று பார்த்து பார்த்து எடுக்கபட்ட விஷயம் சினிமா உன்மை கிடையாது என்றார். மூளைச்சாவு அடைந்தவர்கள் உடலை தானம் செய்தால் 8 பேருக்கு உடல் உறுப்புகள் கிடைக்கும், உடல் உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்வார்கள் என்று அரசு அறிவித்துள்ளது என்றார்.
தொடர்ந்து பாலா செய்தியாளர்களிடம் கூறிய போது தனக்கு தற்போது கல்யாணம் இல்லை என்றும் , நடிகர் விஜய் கட்சி தொடங்கியது குறித்த கேள்விக்கு விஜய் சார் பீக்கில் இருப்பதாகவும் தான் வீக்கீல் இருப்பதாகவும் அவரைப் பற்றி பேசும் அளவிற்கு தான் பெரிய இடத்தில் இல்லை என்றும் அவர் எது செய்தாலும் சரியாக தான் இருக்கும் என கருத்து தெரிவித்தார். நடிகர் விஜய் தனது கட்சிக்கு அழைத்தால் செல்வீர்களா என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு தன்னை கோர்த்து விடுவது போல் இந்த கேள்வி இருப்பதாகவும் , அரசியலில் செல்லும் அளவிற்கு தனக்கு அறிவு இல்லை எனவும் , பதவி ஆசை எல்லாம் தனக்கு இல்லை என்றும் சேவை செய்வதே எனது நோக்கம் என பதில் கூறினார். மேலும் மொத்தம் பத்து என்ற இலக்கு வைத்து தற்போது ஐந்து ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்து இருப்பதாகவும் , மேலும் ஐந்து ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துவிட்டு தொடர்ந்து அடுத்தடுத்த இலக்குகள் வைத்து அதை நோக்கி பயணிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். 100% தான் செய்யும் சேவையில் அரசியல் கிடையாது என்றார்.