ஒகேனக்கல்லில் நீர்வரத்து 200 கனஅடியாக நீடிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து 5-வது நாளாக 200 கன அடியாக நீடித்து வருகிறது
Update: 2024-03-25 01:36 GMT
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் காரணமாக தமிழக - கர்நாடகா எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைவு காரணமாக ஒகேனக்கல்லில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 300கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படி யாக சரிந்து வினாடிக்கு 200 கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து 5 - வது நாளான இன்றும் ஒகேனக்கல்லுக்கு 200 கன அடியாக நீர்வரத்து நீடித்து வருகிறது.தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல் அருவிகளான ஐந்தருவி பறைகளாக காட்சியளிப்பது டன் சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டி செல்லும் வேகமும் குறைந்துள்ளது.