ஒகேனக்கல்லில் நீர்வரத்து 800 கன அடியாக சரிவு

கர்நாடக அணைகளில் திறந்துவிடும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிந்துள்ளது

Update: 2024-03-16 01:56 GMT

ஒகேனக்கல் 

தர்மபுரிமாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி மற்றும் வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது ஒகேனக்கல் காவிரி ஆறு உலக பிரசத்தை பெற்ற சுற்றுலாத்தலமான ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக நீர்வரத்து இல்லாமல் வறண்டு பாறைகளாக காட்சியளித்து வந்தது. இரு தினங்களுக்கு முன்பு கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதை அடுத்து சுமார் 2500 கன அடியாக நீர்வரத்து வந்து கொண்டு இருந்தது இந்த நிலையில் கர்நாடக அணை பகுதிகளில் தேவையான அளவு மழை இல்லாத காரணத்தால் அணைகளில் நீர் இருப்பு குறைந்து வருவதை அடுத்து நீர் திறந்து விடுவது குறைக்கப்பட்டது. இதனையடுத்து நீர் வரத்து படிப்படியாக சரிந்து தற்போது வினாடிக்கு 800 கன அடியாக நீர் வரத்து வந்து கொண்டு இருக்கிறது தொடர்ந்து தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பீலிகுண்டலு பகுதியில் மத்திய நீர் வள மேலாண்மை துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News