தேனியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் அமைப்பு
கத்திரி வெயில் துவங்கிய நிலையில் திமுகவினர் நீர் மோர் பந்தல் அமைத்து மோர் வெள்ளரி தர்ப்பூசணி குளிர்பானங்கள் சர்பத் வழங்கி வருகின்றனர்.
தமிழகத்தில் கத்திரி வெயில் இன்று முதல் துவங்கிய நிலையில் அதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்களை வாட்டி வதக்கி வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் வெயில் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல் திறந்து வைத்து வருகிறார்.
போடி அருகே உள்ள சிலமலையில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலில் பொதுமக்களுக்கு மோர் தர்பூசணி வெள்ளரி குளிர்பானங்கள் பலம் வகைகள் பொதுமக்களுக்கு தங்கதமிழ்செல்வன் வழங்கி துவங்கி வைத்தார். கத்திரி வெயில் துவக்கம் முதல் முடிவு வரை நீர்மோர் பந்தல் செயல்படுவதற்கு அப்பகுதி பொறுப்பாளர்களிடம் உத்தரவிட்டார்.
அதன் தொடர்ச்சியாக தேனி பழனிசெட்டிப்பட்டி பகுதியில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு பழங்கள் நீர்மோர் வழங்கினார். தொடர்ச்சியாக தேனி பழைய பேருந்து நிலையம் தேனி பங்களா மேடு பேருந்து நிலையம் பெரியகுளம் பகுதிகளில் நீர் மோர் பந்தல்களை திறந்து வைத்தார்.