திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
பெரம்பலூரில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்புவிழா நடைபெற்றது.
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க, வெயிலில் வெப்பம் அதிகளவு இருப்பதால், பொதுமக்களின் தண்ணீர் தாகத்தை தீர்க்கும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு வரும் நிலையில், மே 6 ஆம் தேதி குரும்பலூர் பேரூராட்சியில் திமுக சார்பில் நீர் போர் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை பெரம்பலூர் திமுக நகர செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான பிரபாகரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி வெள்ளரிப்பிஞ்சு, நீர் மோர், ஆகியவற்ற வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் குரும்பலூர் பேரூராட்சி நிர்வாகிகள், மற்றும் பேரூராட்சி தலைவர் துணைத் தலைவர் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் திமுகவினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.