தும்பிவாடியில் குடிநீர் குழாய் பிரச்சனை: குடும்பத்தினர் இடையே தகராறு

தும்பிவாடியில், குடிநீர் குழாய் மரத்தின் அருகாமையில் செல்வதால் இரு குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது.

Update: 2024-05-20 13:01 GMT

தூம்பிவாடி

 கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தும்பிவாடி, ஐந்து ரோடு பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார் மனைவி கீதா வயது 41. இவரது வீட்டின் அருகாமையில் வசித்து வருபவர் மூர்த்தி என்கிற கிருஷ்ணமூர்த்தி வயது 52,இவரது மனைவி புஷ்பா என்கிற புஷ்பலதா,

இவர்களது மகன் நவீன். கீதாவின் வீட்டிற்கு வரும் குடிநீர் குழாய் இணைப்பு,மூர்த்தி வீட்டிற்கு முன் வளர்க்கும் மரத்தின் அருகாமையில் வருமாறு அமைக்கப்பட்டுள்ளது. இதனால்,இவர்கள் இரண்டு குடும்பத்தாருக்கு இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வருகிறது.

இந்நிலையில் மே 14ஆம் தேதி காலை ஏழு முப்பது மணி அளவில் மீண்டும் இதே பிரச்சினை தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. அப்போது கிருஷ்ணமூர்த்தி புஷ்பலதா மற்றும் நவீன் ஆகிய மூவரும் சேர்ந்து கீதாவை தகாத வார்த்தை பேசி கை மற்றும் தடியால் தாக்கி மிரட்டல் விடுத்ததோடு துன்புருத்தி உள்ளனர். இது இந்த சம்பவத்தில் காயமடைந்த கீதா, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். 

 இந்த சம்பவம் தொடர்பாக அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக கிருஷ்ணமூர்த்தியை கைது செய்துள்ளனர். மேலும் புஷ்பலதா நவீன் ஆகிய இருவரும் தலைமறைவாகிவிட்டனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, தலைமறைவாகிய வர்களை வருகின்றனர் சின்னதாராபுரம் காவல் துறையினர்

Tags:    

Similar News