கலசப்பாக்கம் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு

கலசப்பாக்கம் அருகே இலவச தண்ணீர் பந்தலை சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார்.;

Update: 2024-04-29 04:07 GMT

தண்ணீர் பந்தல் 

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட படவேடு எம்ஜிஆர் சிலை அருகில் இலவச தண்ணீர் பந்தலை போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு திறந்து வைத்தார் .

பொதுமக்களுக்கு நீர், மோர், இளநீர், தர்பூசணி போன்றவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் புதுப்பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர், வழக்கறிஞர் ரமேஷ், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News