இரண்டு நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
ஆத்தூர் நரசிங்கபுரம் நகராட்சியில் குழாய் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.;
Update: 2024-05-14 08:08 GMT
ஆத்தூர் நரசிங்கபுரம் நகராட்சியில் குழாய் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகர் பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு . நரசிங்கபுரம் நகராட்சிக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பெறப்படும் 1100 மி.மீ விட்டமுள்ள பிரதான குழாயானது பாலகனூர் என்ற இடத்தில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்நகராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்ய இயலாது. எனவே நரசிங்கபுரம் நகர் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு