எலி வால் அருவிக்கு நீர் வரத்து
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கோடை மழையால் எலிவால் அருவிக்கு நீர் வரத்து துவங்கியது.
Update: 2024-05-11 14:08 GMT
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கோடை மழையால் எலிவால் அருவிக்கு நீர் வரத்து துவங்கியது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்சி மலை பகுதியில் கடந்த 3 மாதங்களாக போதிய மழை பெய்யாது போனது. கொடைக்கானல் செல்லும் சாலையில் டம்டம்பாறை பகுதியின் எதிரே உள்ள எலிவால் அருவியல் முற்றிலும் நீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது. இதனால் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பெருமாள்மலை, சாமக்காடு, பாலமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கோடை மழையின் காரணமாக அருவியல் சிறிதளவு நீர் வரத்து துவங்கி அருவியில் நீர் கொட்டி வருகிறது.