தென்காசி மாவட்டத்தில் தர்பூசணி பழம் விலை உயர்வு
தென்காசி மாவட்டத்தில் தர்பூசணி பழங்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Update: 2024-05-05 01:10 GMT
தென்காசி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், இன்று இரண்டாம் நாள் கத்தரி வெயிலான அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகியுள்ளது. இதனால் வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக மக்கள் ஜூஸ் கடைகளை நாடி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் வரை ஒரு கிலோ தர்ப்பூசணி பழம் ரூ.20 முதல் 30 வரை விற்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று ஒரு கிலோ தர்ப்பூசணி பழம் விலை உயர்ந்து ரூ.40க்கு விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கத்திரி வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் தர்பூசணி பழங்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.