மீனவர்கள் விடுதலையில் எங்கள் பங்கும் உள்ளது - மீனவர் சங்கம்
குவைத் சிறையில் சிக்கி தவித்த மீனவர்கள் விடுதலையில் எங்கள் பங்கும் உள்ளது என அகில இந்திய மீனவர் சங்கம் தலைவர் ஆன்டன் கோமஸ் தெரிவித்தார்.
அகில இந்திய மீனவர் சங்க கூட்டம் நாகர்கோவில் ஆயர் இல்ல வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அகில இந்திய மீனவர் சங்க தலைவர் ஆன்டன் கோமஸ், தேசிய அமைப்பு செயலாளர் சேவியர், தேசிய பொதுச் செயலாளர் ராஜா, வழக்கறிஞர் ரெக்ஸ் மாரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கூட்டத்திற்கு அகில இந்திய மீனவர் சங்க தலைவர் ஆன்டன் கோமஸ் கூறுகையில், - குவைத்தில் இருந்து இரண்டு ஆண்டுகளாக ஊதியம் இல்லாமல் சித்திரவதைகளுக்கு ஆளாகி துணிச்சலுடன் கடல் வழியாக மும்பை வந்து சேர்ந்த மூன்று மீனவர்கள் கடந்த ஆறாம் தேதி மும்பை கொலபா காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு 18ஆம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வில் அகில இந்திய மீனவர் சங்கத்தின் வழக்கறிஞர் ரெக்ஸ் மரியா தொடக்க முதல் செயல்பட்டு ஜாமீன் நடவடிக்கைக்கு உதவியுள்ளார். அதனைப் போன்று பசலியான் என்பவரும் மீனவர்களை ஜாமில் எடுக்க முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் விஜய் வசந்த் எம்.பி அதற்கான தொகைகளை நாங்கள் செலுத்தும் முன்னதாக செலுத்தி இருந்தார். அதனை நாங்கள் மறுக்கவில்லை. அதேவேளை நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று தகவலை பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதிமன்றம் எங்களது முறையிட்ட ஏற்றுத் தான் அவர்களை விடுதலை செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.