களைகட்டிய அன்னூர் ஆட்டுச் சந்தை.

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்னூர் சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது.

Update: 2023-11-11 09:25 GMT

களைகட்டிய அன்னூர் ஆட்டுச் சந்தை.


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கோவை மாவட்டம் அன்னூர் அதன் சுற்று வட்டார கிராமங்களில் கிராமங்களிலும் விவசாயம் பிரதான தொழிலாக உள்ள நிலையில் இங்குள்ள மக்கள் விவசாயத்துடன் சேர்ந்து ஆடு வளர்ப்பையும் செய்து வருகின்றனர். வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் அன்னூர் சந்தையில் விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனை செய்வது வழக்கம்.

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று அன்னூர் சந்தையில் அதிகாலை முதலே ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது.ஆட்டு சந்தை தொடங்கியதும் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கிச் செல்கின்றனர்.கோவை, ஈரோடு, திருப்பூர்,நீலகிரி மாவட்டங்களிலிருந்தும் கர்நாடகா, கேரள மாநிலங்களில் இருந்தும்   ஆடுகளை வாங்க சந்தையில் ஏராளமான வியாபாரிகள் திரண்டுள்ளனர்.

குட்டிகள் ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையிலும் திடகாத்திரமான உடல்வாகுடன் எடை அதிகம் உள்ள ஆடுகள் 8 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதேபோல நாட்டுக் கோழிகள் மற்றும் இறைச்சி வெட்ட பயன்படுத்தும் மரக்கட்டைகள் கணிசமாக விற்பனையாகி வருகிறது. காலை முதல் தற்போது வரை சுமார் 1.5 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News