தென்காசியில் பரபரப்பு: வெல்டிங் பட்டறை அதிபர் வெட்டி படுகொலை

தென்காசியில் வெல்டிங்க் பட்டறை அதிபரை வெட்டி கொலை செய்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Update: 2024-02-25 02:45 GMT
தென்காசியில் பரபரப்பு: வெல்டிங் பட்டறை அதிபர் வெட்டி படுகொலை

தென்காசி நகராட்சி எல். ஆர் சாமி நாயுடு பாளையம் தெருவை சேர்ந்தவர் வரதராஜன். இவரது மகன் வினோத் (வயது 27). இவர் அந்த பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வந்தார். நேற்று (23.02.2024) இரவு வேலை முடிந்து வெல்டிங் பட்டறையை அடைத்து விட்டு வினோத் எல் ஆர் எஸ் பாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ரயில்வே பீடர் ரோடு சந்திப்பு பகுதியில் வினோத் வந்து கொண்டிருந்த போது அங்கு வந்த சில மர்ம நபர்கள் திடீரென வினோத்தை வழிமறித்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதனால் படுகாயம் அடைந்த வினோத் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது பற்றி தகவல் அறிந்த தென்காசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News