பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள்

Update: 2023-12-19 06:02 GMT

நலத்திட்ட உதவிகள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் டிசம்பர் 18ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய்துறையின் சார்பில், வேப்பந்தட்டை வட்டம் எறையூர் கிராமத்தைச்சேர்ந்த நரிக்குறவர் இனத்தைச் சார்ந்த 10 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மேலும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில், ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட கோகிலா தேவி என்பவருக்கு ரூ.5,479 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரத்தினை வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 2 பயனாளிகள் மூன்று சக்கர வாகனம் வேண்டி பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர். மனுவினை விசாரித்து உடனடியாக 2 நபர்களுக்கும் தலா ரூ.9,050 மதிப்பிலான மூன்று சக்கர வாகனத்தினையும், வழங்கினார் மேலும் இயற்கை மரணமடைந்த 11 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தொழிலாளர் நலத்துறையின் மூலம் தலா ரூ.17,000 வீதம் ரூ.1,87,000 மதிப்பீட்டிலான உதவித்தொகையினை மாவட்ட ஆட்சியர் கற்பகம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கார்த்திக்கேயன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரவணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி, உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News