மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.14.46 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூரில் ரூ.14.46 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Update: 2024-01-09 11:42 GMT

செயற்கை கால்கள் வழங்கல் 

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு செயற்கை கால் மற்றும் கை வழங்கும்  முகாம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி தலைமையில் நடைபெற்ற முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 20 பயனாளிகளுக்கு ரூ.14,39,100 மதிப்பிலான செயற்கை கால்களும், ஒரு நபருக்கு ரூ7,540 மதிப்பிலான சக்கர நாற்காலியினையும் என மொத்தம் ரூ.14,46,640 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கற்பகம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலையில் வழங்கினார்.

இதை தொடர்ந்து செயற்கை கால் பெருத்தப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, அதன் பராமரிப்பு குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கார்த்திக்கேயன், உள்ளிட்ட அனைத்து துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News