மக்கள் தொடர்பு திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

சேந்தமங்கலத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Update: 2023-11-30 17:27 GMT

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், காளப்பநாயக்கன்பட்டி குறுவட்டம், வாழவந்திக்கோம்பை கிராமத்தில் வட்ட அளவிலான மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமை தாங்கினார். சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி முன்னிலை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் 83 பயனாளிகளுக்கு ரூ.39.39 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, சிறப்புரையாற்றினார். அப்போது, நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளை களைய ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து வட்ட அளவிலான மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு பொறுப்பேற்ற இரண்டரை ஆண்டுகளில் 90 சதவீதத்திற்கும் மேல் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது கல்லூரி மாணவிகளுக்கான புதுமைப் பெண் திட்டம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் மகளிர்க்கு இலவச பஸ் பயணம் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது கடந்த அதிமுக ஆட்சியில் பத்தாண்டுகளாக செய்யாத பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். மகளிர் குழுக்களுக்கான கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு நகை தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்புடன் செயலாற்றி உள்ளார் என்றார்.

Tags:    

Similar News