மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள்
கெடிலம் காட்டுச்செல்லூர் ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில்பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.;
Update: 2024-02-11 06:13 GMT
நலத்திட்ட உதவிகள்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட கெடிலம் காட்டுச்செல்லூர் ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார்,ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம்.க.கார்த்திகேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜெ.மணிக்கண்ணன் ஆகியோர் உள்ளனர்.