திருவானைக்கா அம்மனுக்கு வெள்ளை சாத்துப்படி

திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் வெள்ளிக்கிழமை வெள்ளை சாத்துப்படியில் ஏராளாமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-04-13 02:00 GMT

வெள்ளைய்சாத்துபடி

திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் பங்குனி மண்டல பிரம்மோற்ஸவ விழாவின் தேரோட்ட நிகழ்ச்சியின் 10 -ஆம் நாளான வெள்ளிக்கிழமை வெள்ளை சாத்துப்படியில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளினா். இக்கோயிலில் பங்குனி மண்டல பிரம்மோற்ஸவ விழா மாா்ச் 17- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா ஏப். 24- ஆம் தேதி வரை 48 நாள்கள் நடைபெறவுள்ளது. இதில் முக்கிய நிகழ்ச்சியான பங்குனித் தேரோட்டம் ஏப். 8- ஆம் தேதி நடைபெற்றது.

இதையடுத்து தினமும் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி 4 -ஆம் பிரகாரத்தை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இந்நிலையில், தேரோட்ட விழாவின் 10- ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு நடராஜா் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து நண்பகல் 12மணிக்கு தெற்குத் தெருவில் பிரம்ம தீா்த்த குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது.இதில் அஸ்திரதேவருக்கு தீா்த்தவாரி அபிஷேகம் செய்யப்பட்டது.

மாலை 6 மணிக்கு சுவாமியும், அம்மனும் ஏக சிம்மாசனத்தில் (வெள்ளை மலரான மல்லிகைப்பூவால் முகம் மட்டும் தெரியும் வகையில்) வெள்ளை சாத்துப்படி அலங்காரத்தில் வெண் கொற்றா குடையுடன் பிரம்ம ஸ்வருபமாய் எழுந்தருளி 4 ஆம் பிரகாரத்தை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். சனிக்கிழமை (ஏப்.13) முதல் ஏப்.15 -ஆம் தேதி வரை சொக்கா் உற்ஸவம் எனும் பல்லக்கில் சுவாமியும், அம்மனும் உற்ஸவ மண்டபத்தில் எழுந்தருள்கின்றனா்.விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஆ.ரவிச்சந்திரன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

Tags:    

Similar News