தனி நலத்துறை அமைக்க விதவைப் பெண்கள் கோரிக்கை !
கைம்பெண்களுக்கு தனியாக நலத்துறை ஏற்படுத்த வேண்டும் மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் நடைபெற்ற 500 விதவைப் பெண்கள் கலந்துகொண்ட வாழ்வுரிமை சங்க மகளிர் தின விழாவில் தீர்மானம்.
Update: 2024-03-09 09:57 GMT
விதவைப் பெண்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பு நாகை மாவட்ட தலைவர் கஸ்தூரி தலைமையில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவிலில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்க பொருளாளர் கலைச்செல்வி புளியந்துறை ஊராட்சி மன்ற தலைவர் நேதாஜி மற்றும் 500 விதவைப் பெண்கள் உள்ளிட்ட 800 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு 2022 ஆம் ஆண்டு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் உருவாக்கி 15 மாதங்கள் கடந்துள்ள நிலையில் அந்த நல வாரியத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்தி ஆக்கபூர்வமாக செயல்பட நடவடிக்கை எடுக்க ஜார்கண்ட் மாநிலத்தில் மறுமணம் செய்து கொள்ளும் கைம்பெண்களுக்கு ரூபாய், மாற்று திறனாளிகளுக்கு தனியாக நலத்துறை உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருவதைப் போலவே 40 லட்சத்துக்கு மேல் இருக்கும் கைம்பெண்களுக்கும் தனியாக ஒரு நலத்துறை ஏற்படுத்த வேண்டும், மேலும் இக்கூட்டத்தில் கைம்பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகையை 1500 ஆக உயர்த்த வேண்டும் ஜார்கண்ட் மாநிலத்தில் வழங்கப்படுவதைப் போன்று மறுமணம் செய்து கொள்ள கைம்பெண்களுக்கு ரூ 2 லட்சம் வழங்க வேண்டும், கைம்பெண்களின் சுய உதவிக் குழுக்களுக்கு இயற்கை விவசாயம் செய்ய இரண்டு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு வழங்கி அந்நிலங்களை பண்படுத்தி விவசாயம் செய்ய உதவி தொகை வழங்க வேண்டும், குறிப்பாக தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024 ஐ வெளியிட்ட தமிழக அரசுக்கு கைம்பெண்கள் நல சங்கம் சார்பாக நன்றி தெரிவித்த தீர்மானம் உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.