கணவர் மாயம் மனைவி போலீசில் புகார்
கள்ளக்குறிச்சியில் காணாமல் கணவனை மீட்டு தரகோரி மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.;
Update: 2024-04-26 02:38 GMT
கணவன் மாயம்
கள்ளக்குறிச்சி கவரை தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன்,52; இவர் கடந்த 22 ம் தேதி காலை 4.௦௦ மணிக்கு கடைவீதிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் போலீசில் புகார் செய்தனர். இது குறித்து அவரது மனைவி கவிதா கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.