விருதுநகரில் குடும்ப பிரச்சினையில் மனைவி கொலை: கணவர் சரண்

விருதுநகரில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு காவல்நிலையத்தில் சரணடைந்த கணவரால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2024-01-20 11:56 GMT
கொலையானவர் 

விருதுநகர் இந்திரா நகர் பகுதியில் வசித்து வந்தவர் கல்பனா தேவி ( 38 ) இவருடைய கணவர் செந்தூரப்பாண்டி .இவர்கள் இருவரும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாத கல்பனா தேவி நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடுத்துவதாகவும் அந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்று கல்பனாதேவியின் வீட்டிற்கு சென்ற அவருடைய கணவர் செந்தூரப்பாண்டி தன்னுடன் வந்து சேர்ந்து வாழும் படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

Advertisement

இந்த சம்பவத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் செந்தூரப்பாண்டி மறைத்து வைத்திருந்த கத்தியால் கல்பனா தேவியின்கழுத்தை அறுத்துள்ளார். இதில் கல்பனா தேவி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார் .

இதை அடுத்து மனைவியை கொலை செய்த கணவர் செந்தூரப்பாண்டி விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்த சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News