கணவர் தாக்கியதில் மனைவி படுகாயம்
புதுக்கோட்டை மாவட்டம்,அகரபட்டியில் மனைவியை தாக்கிய கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.;
Update: 2024-06-06 12:48 GMT
மனைவி படுகாயம்
அன்னவாசல் அருகே உள்ள அகரப்பட்டியை சேர்ந்தவர் வினோதினி. இவரது கணவர் பாலசுப்பிரமணியன் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வயலோகம் திருவிழாவில் வினோதினியை அவரது கணவர் பாலசுப்பிரமணியன் மற்றும் கற்பகம், சோலை ஆகியோர் சேர்ந்து தகாத வார்த்தையால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த வினோதி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.