காட்டுப்பன்றி வேட்டையாடியவர்களுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் !
காட்டுப்பன்றி வேட்டையாடி இறைச்சியை பங்கு போட்டு கொண்டு இருந்த 4 பேரை பிடித்து போலிசார் விசாரணை நடத்தினர். அவர்கள் 4 பேருக்கும் தலா ரூ. 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். .;
By : King 24x7 Angel
Update: 2024-04-16 06:33 GMT
அபராதம்
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நாவலூர் கிராமத்தில் காட்டுப்பன்றியை சிலர் வேட்டையாடி இறைச்சியை பங்கு போட்டு கொண்டு இருப்பதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வன அலுவலர் சிவகுமார் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது காட்டுப்பன்றி இறைச்சியை பங்கு போட்டு கொண்டு இருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் வெள்ளையூர் செல்வராஜ், இலுப்பநத்தம் ரமேஷ், நாவலூர் வசந்தராஜ், சசிகுமார் ஆகியோர் என்பதும், காட்டுப்பன்றியை வேட்டையாடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேருக்கும் தலா ரூ. 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். .