குன்னூரில் காட்டுயானைகள் உலா: வனத்துறை அறிவுறுத்தல்..!
குன்னூரில் ஆக்ரோசத்துடன் குடியிருப்பு பகுதிக்குள் காட்டுயானைகள் உலாவருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-01-13 08:43 GMT
நீலகிரி மாவட்டம் குன்னூரில் காட்டுயானைகள் கிளன்டேல் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது அருகே பள்ளிகூடம் மற்றும் தேயிலை தொழிற்சாலை உள்ளதால் குன்னூர் வனசரகர் ரவீந்தரநாத் தலமையில் 25 பேர் கொண்ட வனக் குழுவினர் விடிய விடிய கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இரவு வனத்துறையினரை காட்டுயானைகள் விரட்டியதில் ஒருவர் படுகாயமடைந்தார். அவர் தற்போது உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். யானை குடியிருப்பு பகுதிக்குள் உலா வரு்வதால் பொதுமக்கள் கவனமா இருக்க வேண்டும் என குன்னூர் வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.