குருவிமலை ரேஷன் கடைக்கு பசுமை பந்தல் அமைக்கப்படுமா?

குருவிமலை ரேஷன் கடைக்கு முன், பில் போடுவோர் காத்திருக்கும் இடத்தில் பசுமை பந்தல் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2024-06-14 12:10 GMT

குருவிமலை ரேஷன் கடைக்கு முன், பில் போடுவோர் காத்திருக்கும் இடத்தில் பசுமை பந்தல் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா, களக்காட்டூர் ஊராட்சி, குருவிமலையில் இயங்கும் ரேஷன் கடையில், 726 ரேஷன் கார்டுதாரர்களுக்கு, கார்டின் தன்மைக்கேற்ப அரிசி, சர்க்கரை, கோதுமை, சமையல் எண்ணெய், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கடைக்கு வரும் கார்டுதாரர்கள், 'பில்' போட வரிசையில் நிற்கும் இடத்திலும், பொருட்கள் வாங்கும் இடத்திலும் கூரை வசதி இல்லை.

இதனால், வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. கத்திரி வெயில் முடிந்தும், காஞ்சியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், ரேஷன் கடைக்கு வரும் வயதானவர்கள், வெயிலில் நீண்டநேரம் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதேபோல் மழைக்காலத்திலும் கார்டுதாரர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, குருவிமலை ரேஷன் கடைக்கு முன், பில் போடுவோர் காத்திருக்கும் இடத்தில் பசுமை பந்தல் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கார்டுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News