பட்டாசு தொழிலை காப்பாற்ற உறுதியாக துணை நிற்பேன்: பாஜக வேட்பாளர்

பட்டாசு தொழிலை காப்பாற்ற உறுதியாக துணை நிற்பேன் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் சிவகாசியில் தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-06 10:51 GMT
பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் பரப்புரை

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் இந்திரா நகரில் பிரச்சாரம் செய்த பாஜக வேட்பாளர் ராதிகாவிடம்,கழிப்பறை இல்லை என பெண்கள் புகார் அளித்த நிலையில்,என்னை வெற்றி பெற வைத்தால்,சொந்த செலவில் சுகாதார வளாகம் கட்டி தருவேன், என உறுதி அளித்தார்.

சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா பிரச்சாரத்தில் பேசுகையில்: சிவகாசி பகுதியில் பட்டாசு முக்கிய தொழிலாக உள்ளது. பட்டாசு பிரச்சனை தொடர்பாக இறுதி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.நான் சிவகாசி பகுதியில் உள்ள பெரும்பாலான பட்டாசு ஆலைகளுக்குச் சென்று தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டு வருகிறேன்.

தமிழகத்தில் பாஜகவிற்கு ஒரு எம்பி கூட இல்லாத போதும்,சீன லைட்டர்களால் தீப்பெட்டி தொழிலுக்கு பிரச்சனை வந்த போது, உடனடியாக பாஜக அரசு, லைட்டர்களுக்கான வரியை உயர்த்தி, அத்தொழிலை காப்பாற்றியது. பட்டாசு தொழிலை காப்பாற்ற பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் எண்ணற்ற உதவிகளை செய்து உள்ளனர்.

பிரச்சாரத்தின் போது கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News