பயன்பாடற்ற பள்ளிக்கட்டிடம் அகற்றப்படுமா?
அரையப்பாக்கம் ஊராட்சி நடுநிலைப் பள்ளி கட்டடம் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நிலையில் சிதிலமடைந்து உள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Update: 2024-02-08 14:32 GMT
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரையப்பாக்கத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 80-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இந்த வளாகத்தில், 1981ம் ஆண்டு ஓடுகளால் வேயப்பட்ட பள்ளி கட்டடம் கட்டப்பட்டது. தற்போது, 40 ஆண்டுகள் கடந்த நிலையில் பயன்பாடு இன்றி, பழைய பொருட்களை வைக்கும் இடமாக மாறி உள்ளது. இதையடுத்து, கட்டடம் பழமையானதால் அசம்பாவிதம் ஏற்படும் முன் இடித்து அகற்ற, துறை சார்ந்த அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.