ஏனங்குடி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கழிவறை வசதி செய்யப்படுமா?

நாகை மாவட்டம் ஏனங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கழிவறை வசதி செய்யப்படுமா? என பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2024-06-10 09:45 GMT

ஏனங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி 

நாகை மாவட்டம் ஏனங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கழிவறை வசதி செய்யப்படுமா? பெற்றோர் எதிர்பார்ப்பு ஏனங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கழிவறை வசதி செய்யப்படுமா? என மாணவர்களின் பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.

கழிவறை வசதி நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடியில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது.இந்த பள்ளியில் ஏனங்குடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ - மாணவிகள் 6 முதல் 12-ம் வகுப்பு வரை 400 - க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.இந்த நிலையில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தனியாக கழிவறை வசதி இல்லாமல் உள்ளது.

இதனால் மாணவர்கள் அருகில் உள்ள காடுகள்,பள்ளி மைதானம் மற்றும் திறந்தவெளிகளை பயன்படுத்தி சிறுநீர் உன்கிட்ட இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர்.இதனால் மாணவர்களுக்கு சுகாதார சீர்கேடுகள் மற்றும் நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது.மேலும் திறந்தவெளிகளை பயன்படுத்துவதால் அருகில் உள்ள வயல் வெளிகளில் இருந்து பாம்பு,தேள்,பூரான் உள்ளிட்ட விஷ பூச்சிகள் தாக்கும் அபாய நிலையில் உள்ளது. நடவடிக்கை இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு மாணவர்களுக்கு தனியாக கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News