திற்பரப்பு அருவியில் குளுகுளு சீசன் 

சாரல் மழையால் திற்பரப்பு அருவியில் குளிர்ச்சி நிலவுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

Update: 2024-01-10 08:32 GMT
திற்பரப்பில் சுற்றுலா பயணிகள்
கன்னியாகுமரி மாவட்டம்  மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தி பாய்ந்தோடும் கோதையாறு, திற்பரப்பு பகுதியில் அருவியாக கொட்டுகிறது. அருவியின் மேல்பகுதியில் கோதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு படகு சவாரியும் மேற்கொள்ளப்படுகிறது.    இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் தற்போது வெயில் குறைந்து சாரல் மழை பெய்து வருகிறது.  திற்பரப்பு பகுதியிலும் சாரல் மழை பெய்து வருவதால், குளுகுளு சீசன் நிலவுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்  வந்தவண்ணம் உள்ளனர். இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.     குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக மக்கள் வந்திருந்தனர். திற்பரப்பில் ஏற்கனவே குளிர்ந்த காலநிலை நிலவி வரும் நிலையில் தற்போது சாரல் மழை மீண்டும் திற்பரப்பு அருவியை குளிர்ச்சியடைய செய்துள்ளது.
Tags:    

Similar News