குமரியில் போதை ஊசி மாத்திரைகளுடன் 2 பேர் கைது !!

குமரியில் போதை ஊசி மாத்திரைகளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

Update: 2024-05-25 11:21 GMT

கைது 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், வடசேரி பகுதியில் திருட்டும் மது விற்பனை நடப்பது தொடர்பாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்று அந்தப் பகுதியில் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரணை நடத்தி, அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர்.அவர்களிடம் மொத்தம் 50 கிராம் கஞ்சா, வலி நிவாரண ஊசி மருந்துகள், மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் நாகர்கோவிலில் உள்ள மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இரண்டு பேரும் அதே பகுதி இளங்கடையை சேர்ந்த சுதீர் (46), கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (39) என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் கஞ்சா மட்டும் இன்றி மருத்துவமனைகளில் டாக்டர்களின் அனுமதியுடன் பயன்படுத்தப்படும் ஊசி மருந்துகள், மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தி வந்துள்ளது தெரிய வந்தது. மேலும்  அவற்றை பலருக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதை அடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதில் சுதிர் என்பவர் சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவராவார். சமீபத்தில் தான் அவர் நாகர்கோவில் பகுதிக்கு வந்துள்ளார். இவர் சென்னையில் ஒரு மது மறுவாழ்வு மையம் ஒன்றில் பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். அங்கிருந்து கிடைத்த மருந்து, மாத்திரை வகைகளை போதைக்காக பயன்படுத்தியது தெரிய வந்தது. இவர்களுக்கு மருந்துகள் கடத்த உதவியது யார்? கூட்டாளிகள் யார்? என்பது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News