கஞ்சா வைத்திருந்த பெண் கைது

தேனி மாவட்டம், கம்பம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது கஞ்சா வைத்திருந்த பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-02-09 08:21 GMT
கஞ்சா வைத்திருந்த பெண் கைது

தேனி மாவட்டம், கம்பம் வடக்கு காவல் நிலைய சார்பாக ஆய்வாளர் இளையராஜா தலைமையிலான காவல்துறையினர் நேற்று கம்பம் விட்டு சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது கம்பம் விவேகானந்தர் தெருவை சேர்ந்த நந்தினி (32) என்பவர் வெள்ளை நிற பையில் இரண்டு கிலோ கஞ்சா வைத்திருந்தார். நந்தினியை கைது செய்த காவல்துறையினர் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News