மளிகை கடையில் தடை புகையிலை பொருட்களை விற்ற பெண் கைது
பள்ளமருதபட்டியில் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற பெண் கைது. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, க. பரமத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளமருதபட்டி பகுதியில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை நடப்பதாக காவல் உதவி ஆய்வாளர் உதயகுமாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில், டிசம்பர் 12ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில், பள்ளமருதப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வரும்,அதே பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் செல்வன் மனைவி லதா வயது 39 என்பவர், அவரது மளிகை கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பொருட்களை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு, அவரது கடையில் விற்பனைக்கு வைத்திருந்த 80 ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இந்த விற்பனையில் ஈடுபட்ட லதாவை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர், அவரை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் க.பரமத்தி காவல்துறையினர்.