சொக்கலிங்காபுரத்தில் பெண் தாக்குதல்: போலீசில் புகார்
சொக்கலிங்காபுரத்தில் பெண்ணை தர குறைவாக பேசி தாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் E. சொக்கலிங்காபுரத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி இவருடைய உறவினர் பாலமுருகன் இவர்கள் இருவருக்கும் சொந்தமான வீட்டை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்து விட்டு பாலமுருகன் பணம் மற்றும் வீட்டில் இருந்தால் சாமான்களை எடுத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
அந்த வீட்டை பாலமுருகனின் உறவினரான ராமசெல்வம் பராமரிப்பு செய்ய வந்ததாகவும், அப்பொழுது ராமசெல்வத்திற்கும் மகா லட்சுமி க்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு அது முற்றியதில் ராமச்செல்வம் மகாலட்சுமியை தாக்கியதாகவும், இதனால் மகாலட்சுமி காயமடைந்ததாக கூறப்படுகிறது.
காயம் அடைந்த மகாலட்சுமி சிகிச்சை பெற்று வரும் அவர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கூறி காவல் நிலையத்தில் புகார் அதன் அடிப்படையில் வச்சக்காரப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.