கடன் தொல்லையால் பெண் தற்கொலை

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-04-12 09:02 GMT
தற்கொலை

திருச்சி மாவட்டம், நம்பர் 1 டோல்கேட் அருகே குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் 57 வயதான விஜயா. தற்போது ராயர் தோப்பு சுப்பிரமணியன் அவென்யூவில் வசித்து வருகின்றனர். இவர் தனது மகனுக்காக கடன் வாங்கி வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார். மகனுக்கு அந்த வேலை பிடிக்காததால் திரும்பி வந்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார் விஜயா.

இந்நிலையில் கடந்த 2 ம் தேதி தற்கொலை செய்து கொள்ள விஷம் குடித்தார் இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News