கணவர் பிரிந்து சென்ற சோகத்தில் மனைவி தற்கொலை
சாத்தான்குளம் அருகே கணவர் பிரிந்து சென்ற சோகத்தில் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-05-24 16:09 GMT
தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகில் உள்ள கட்டாரி மங்கலம் கிராமம் சிஎஸ்ஐ கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி ஜென்சி (24). இந்த தம்பதிக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு திருமண நடந்தது. குழந்தைகள் இல்லை. இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் செல்வகுமார் மனைவியை பிரிந்து சென்றுவிட்டாராம்.
இதனால் மன வேதனையில் இருந்த ஜென்சி நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இயேசு ராஜசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.