கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-02-02 13:01 GMT
பெண் தற்கொலை
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நெசவாளர் காலனி சேர்ந்த சக்திவேல் மனைவி முப்புடாதி இவர் இன்று குடும்ப பிரச்சினை காரணமாக ஊரில் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த சங்கரன்கோவில் தாலுகா போலீசார் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதைக் குறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.