பெண் தற்கொலை : கோட்டாட்சியர் விசாரணை

தூத்துக்குடியில் திருமணமான 3 ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்தது குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2024-05-22 15:29 GMT
தற்கொலை 

தூத்துக்குடி போல்டன்புரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் அலெக்ஸாண்டர் ஜேம்ஸ் மனைவி சுதாகனி (32). இந்த தம்பதிக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சுதா கனி நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் ஏஎஸ்பி சுப்பிரமணிய பாலசந்தரா வழக்கு பதிவு செய்துள்ளார்.

சுதா கனி மனநலம் பாதிக்கப்பட்டு அடிக்கடி தற்கொலைக்கு முயன்றதாகவும் உறவினர்கள் அவரை காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது. சுதாகனி திருமணமான 3 ஆண்டுகளில் இறந்ததால் இதுகுறித்து கோட்டாட்சியர் பிரபு மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News