தூக்கிட்டு இளம் பெண் தற்கொலை - போலீசார் விசாரணை

உளுந்தூர்பேட்டை அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.;

Update: 2024-01-28 11:59 GMT

பெண் தற்கொலை

உளுந்தூர்பேட்டை தாலுகா வடமாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி ஷர்மிளா, 35; இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகளாகிறது. இவர்களுக்கு 12 வயதில் மகள், 7 வயதில் மகன் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் எம். குன்னத்தூர் பகுதியில் மொபைல் ஷாப், பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வந்தனர். இந்நிலையில் காட்டூர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு ஷர்மிளா சென்று இருந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்தபோது புடவையால் ஷர்மிளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement

இதனை அறிந்த கணவர் ராஜா, ஷர்மிளாவின் உடலை வடமாம்பாக்கத்திற்கு எடுத்து வந்து அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தார். இதுபற்றி தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஷர்மிளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருநாவலூர் போலீசார் ஷர்மிளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News