கணவன் வீட்டில் இறந்து கிடந்த பெண்
திருநெல்வேலி மாவட்டம், கீழநத்தம் பகுதியில் பெண் மரணமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-01-27 09:48 GMT
திருநெல்வேலி மாவட்டம், கீழநத்தத்தை சேர்ந்த தொழிலாளி சுடலை மனைவி லட்சுமி. இவர்களின் மகன் அருண் பிரசாத். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனையால் அருண்பிரசாத் மற்றும் லட்சுமி இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். சுடலை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் லட்சுமி பாளையில் உள்ள சுடலை வீட்டில் நேற்று இறந்து கிடந்துள்ளார். இது குறித்து நெல்லை மாநகர குற்ற புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.