இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே மகனுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற தாய், தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-04-19 09:27 GMT
இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
புதுக்கோட்டை மாவட்டம்,கீரனூர் அருகே தொண்டைமான்நல்லூரைச் சேர்ந்தவர் வள்ளிக்கண்ணு (52). இவர் தனது மகன் மணிகண்டன் (24) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கீரனூரிலிருந்து ஊருக்குத் திரும்பியுள்ளார்.அப்போது, திருச்சி நெடுஞ்சாலையில் தவறி கீழே விழுந்தார். ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்ட வள்ளிக்கண்ணு திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபோது, வழியில் இறந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.கீரனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.