பைக்கிலிருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு தென்காசி மாவட்டம்,புளியங்குடி அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-21 09:10 GMT

கர்ப்பிணி மரணம் 

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள வீரசிகாமணியைச் சோ்ந்தவா் மாரியப்பன். இருசக்கர வாகன மெக்கானிக் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி கற்பகவல்லி (38). அங்கன்வாடிப் பணியாளா். 7 மாத கா்ப்பிணியான கற்பகவல்லியை மருத்துவமனைக்கு மாரியப்பன் பைக்கில் கூட்டிச் சென்றாா்.

சங்கரன்கோவில் - புளியங்குடி சாலையில் புளியங்குடி அருகே சென்றபோது பைக்கிலிருந்து கற்பகவல்லி கீழே தவறி விழுந்துவிட்டாராம். இதில் பலத்த காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புளியங்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Tags:    

Similar News