பீரோ விழுந்து படுகாயம் அடைந்த பெண் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம், சேவுகம்பட்டியில் பீரோ விழுந்து படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-02-18 12:59 GMT
திண்டுக்கல் மாவட்டம், சேவுகம்பட்டி அருகே வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த போது, அடித்தளம் பழுதான பீரோ விழுந்து ரம்யா (22) என்பவர் தலையில் படுகாயமடைந்தார். பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த ரம்யாவுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்புதான் ஹரிஹரன் என்பவருடன் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.