உடல்நிலை பாதிப்பு காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை!
திருப்பத்தூர் அடுத்த கோணாப்பட்டு கிராமத்தில் உடல்நிலை பாதிப்பு காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை.;
Update: 2024-04-23 15:41 GMT
தற்கொலை
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கோணாப்பட்டு கிராமத்தில் உடல்நிலை பாதிப்பு காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை திருப்பத்தூர் அருகே கோணாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி (21). இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்த நிலையில் காயத்ரிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்ததாகவும், அதற்காக அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்கியடைந்த காயத்ரி திங்கட்கிழமை இன்று காலை வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயத்ரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆவதால், இந்த வழக்கு திருப்பத்தூர் சப்-கலெக்டர் விசாரணைக்கு மாற்றப்பட்டது.