பரமத்தி அருகே சாலை விபத்தில் பெண் படுகாயம்

பரமத்தி அருகே டூவீலரில் சென்ற பெண் மீது பேவர் மெஷின் மோதி விபத்துக்குள்ளனதில், பெண் படுகாயம் அடைந்தார்.

Update: 2024-05-28 16:22 GMT

பரமத்தி

கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, சுண்டமேடு பகுதியைச் சேர்ந்தவர் எட்வின் சாமுவேல் மனைவி பரிமளா வயது 41. இவர் மே 27 ஆம் தேதி காலை 8:30 மணி அளவில், கரூர் - கோவை சாலையில், அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.

இவரது வாகனம் க.பரமத்தி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, அதே சாலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம், சிறு பனையூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் வயது 19 என்பவர் வேகமாக ஓட்டி வந்த சாலை அமைக்க பயன்படும் பயன்படுத்தப்படும் பேவர் மிஷின் வாகனம் பரிமளா ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்,

வாகனத்துடன் கீழே விழுந்த பரிமளாவுக்கு முன் நெற்றி மற்றும் இடதுபுற இடுப்பு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியர் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள நாச்சிமுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பரிமளா அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக வாகனத்தை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டிய கார்த்திகேயன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் க.பரமத்தி காவல்துறையினர்.

Tags:    

Similar News