சங்ககிரியில் ஏர்கன் குண்டு பாய்ந்து பெண் பலி

சங்ககிரியில் ஏர்கன் குண்டு பாய்ந்து தங்கை பலியான வழக்கில் அண்ணன்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-04-22 15:51 GMT

பலியான பெண்

 ஈரோடு மாவட்டம், பவானி தாலுக்கா கட்டயகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (35), கார் ஓட்டுனர். இவருக்கும் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வேங்கிபாளையம் பாப்பாங்காட்டை சேர்ந்த செல்வராஜ் மகள் தமிழரசி என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ரித்திக் ஸ்ரீ (10), என்ற மகனும், தனிஷ்கா ஸ்ரீ(6), என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தமிழரசி தனது கணவனுடன் குடும்பத் தகராறு காரணமாக சங்ககிரியில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு வந்து விட்டார். இந்த நிலையில் நேற்று தமிழரசியின் அண்ணன் சரத்குமாரும், அவரது பெரியப்பா மகன் சதீஷ்குமாரும் வீட்டு அருகே உள்ள பகவதி அம்மன் கோவில் முன்பு உள்ள இச்சி மரத்தில் கோழி குஞ்சை தூக்க வரும் கழுகை விரட்ட ஏர்கன் துப்பாக்கியில் குண்டை போட்டு மரத்திற்கு கீழ் உள்ள திண்ணையில் வைத்திருந்துள்ளனர்.

அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சரத்குமாரின் நான்கு வயது மகன் அந்த துப்பாக்கியின் ட்ரக்கை அழுத்தியதால் அதிலிருந்து வெளியேறிய குண்டு அங்கு சென்று கொண்டிருந்த தமிழரசியின் வயிற்றில் பட்டு காயம் அடைந்து ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த அவரை அருகிலிருந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி தமிழரி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து தமிழரசியின் கணவன் முருகன் சங்ககிரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஏர்கன் துப்பாக்கியில் குண்டைபோட்டு மரத்தின் கீழ் வைத்திருந்த குற்றத்திற்காக சரத்குமார் (34), சதீஷ்குமார்(38)ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News