பிடமனேரி அருகே பெண்ணிடம் நகை மற்றும் பணம் கொள்ளை
தர்மபுரி, பிடமனேரி அருகே அதிகாலை வீட்டின் கதவை திறந்து தூங்கிய பெண்ணிடம் நகை மற்றும் பணம் கொள்ளை.;
Update: 2024-05-07 07:38 GMT
நகை மற்றும் பணம் கொள்ளை
தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இலக்கியம்பட்டி பஞ்சாயத்து பிடமனேரி அடுத்த மொன்னையன் கொட்டாய் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணிடம் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கழுத்தில் அணிந்து இருந்த அணிந்திருந்த 8 பவுன் நகை மற்றும் பீரோவில் இருந்த 47 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மர்ம நபர்கள் பெண்ணை தாக்கி திருடி தப்பிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது சம்பவ இடத்தில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசு பாதம் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.